தமிழகம் முழுவதும் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!!

தமிழகத்திலுள்ள 22 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது!!

Last Updated : Apr 1, 2019, 06:41 PM IST
தமிழகம் முழுவதும் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!! title=

தமிழகத்திலுள்ள 22 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது!!

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை பொருத்து மாறுபடும் என்பது வழக்கம். தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 20 சுங்கச்சாவடிகளில் மட்டும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 3 முதல் 5 சதவீதம் வரை அதாவது 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இதை தொடர்ந்து, மாதாந்திர அட்டை கட்டணத்திலும் உயர்வு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெறும் இடத்தில் கட்டணம் முடிவுசெய்யப்படவில்லை. இவற்றுக்கான கட்டணம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆத்தூர், பூதக்குடி, சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், பரனூர், வானூர், ஸ்ரீபெரும்புத்தூர், வாணியம்பாடி, சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. GST அமல்படுத்தப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22-ல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Trending News