12:08 23-12-2017
தமிழகம் (மதுரை) வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்!
இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்றார். பயணத்தின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் செல்கின்றார்!
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகின்றார். விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரம் செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பகல் 12 மணியளவில் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
இதனையடுத்து 1.25 மணியளவில் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து சென்னை வரும் குடியரசுத்தலைவர் மாலை 5.45 மணியளவில் கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின் நாளை (ஞாயிறு) விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார் குடியரசுத்தலைவர்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் வருகையை அடுத்து மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.