தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறை பனி நிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் நிலவி வரும் உறை பனி, அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவுநேரங்களில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் உள் தமிழக மாவட்டங்களில் மூடுபனி அதிகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்ககடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்றும், ஆனால் அதனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.