தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழக சட்டமன்றப் பேரவையில் என்று பேசினார். அதில், "பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட சங்க கால துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த ரோமானிய நாணயங்கள் மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள் அரேபிய தீபகற்பத்தை சார்ந்த அழகுப் பொருட்களில் உன்னதத்தை இந்தத் துறைமுகத்தின் வழியே சங்ககாலத் தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் குடிமக்கள் பரவலான எழுத்தறிவு பெற்ற சமூகமாக தொடங்கினார் என்ற உண்மையை உலகம் ஏற்றுக்கொண்டது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக் கூடிய செய்தி.
அகழாய்வு தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை மகரந்தம் பகுப்பாய்வு செய்து அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சுவர்களை வாழ்விட பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்வதில் அங்கே நீர் செல்லும் நன்னீர் சென்றுள்ளதாகவும் தேக்கி வைக்கப்பட்ட நிலையில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவருகிறது. மயிலாடும்பாறையில் வாழ்விடம் பகுதியில் 104 செ.மீ மற்றும் 180 செ. மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்படுகின்றன 2 கரிம மாதிரிகள், பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டின் விழுந்த பயன்பாடு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் தடம் பதித்த இந்தியாவின் பிற பகுதிகளில் (கேரளா, கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா) இவ்வாண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர்பக்கத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை காலக்கணக்கீட்டுக்கு உட்படுத்தியதில் அவை கிமு 2172 ஆண்டை சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அதன் மூலம் தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. தமிழர் நாகரிகம் இன்னும் தொன்மையானதாக இருக்கலாம். அதை ஆய்வுகள் தான் உறுதி செய்யும். தொல்லியல் ஆய்வுகளை விரிவாக்கவும், ஏற்கனவே நடந்த ஆய்வுகளின் முடிவுகளை விரைந்து வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR