கமல்ஹாசனின் பரப்புரை கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர் மீது வழக்கு!!

கமல்ஹாசனின் பரப்புரை கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

Last Updated : May 17, 2019, 09:07 AM IST
கமல்ஹாசனின் பரப்புரை கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர் மீது வழக்கு!! title=

கமல்ஹாசனின் பரப்புரை கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர். 

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். வேலாயுதம்பாளையத்தில் அவர் தனது பிரசாரத்தை நிறைவு செய்வதாக இருந்தார். அங்கு அவர் பேசிய போது, கூட்டத்தில் இருந்த மூன்று பேர் , திடீரென காலணியை வீசி எறிந்தார். கமல் மீது காலணி, முட்டை உள்ளிட்டவை வீசப்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் பொருட்களை வீசியவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொருட்களை வீசியவர்களை பிடித்து கைது செய்ய முயன்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் கூட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதனிடையே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்,போலீஸ் வாகனம் ஒன்றும் உடைக்கப்பட்டது.  இதனிடையே மக்கள் நீதி மய்யத்தினர் கமல் மீதான காலணி வீச்சை கண்டித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறிய போது, கூட்டத்தினர் கலைந்து செல்ல மறுத்து முழக்கமிட்டனர். இதனிடையே கமல் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல் வீசியவர்களை போலீசார் அங்கிருந்த ஒரு உணவகத்திற்குள் வைத்து, கதவை மூடி, அதன் முன் நின்று காவல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் உணவகத்தில் உள்ளவர்களை உடனே வெளியே விட வேண்டும் என்றும், உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றார். கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் கூட்டத்தினர் கலைந்து செல்ல மறுத்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வேலாயுதம்பாளையத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதனிடையே, கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிகழும் சம்பவங்கள் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரீட்சை என்று கூறியுள்ளார். ஆர்ப்பாட்டக் கூட்டம் வன்முறைக்கு வலிந்து இழுத்தாலும் மயங்க வேண்டாம் எனவும், நேர்மைவாதத்திற்கு முன் தீவிரவாதம் தோற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News