திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, அவரது எம்எல்ஏ தொகுதியான திருவாரூருக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அங்கு கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல் ராஜ், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த தொடர்ந்து இன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த நிகழ்வு குறித்து திமுக தலைவர் கருத்து தெரவித்துள்ளார். இது குறித்து வர கூறியபோது, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.
காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
'கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை'
"திருவாரூர் இடைத்தேர்தலை அனைத்து கட்சிகள் - பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப ரத்து செய்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்"
"நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்" pic.twitter.com/uoDVZJcbba
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) January 7, 2019