ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்...

தமிழகத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 8, 2020, 07:41 PM IST
ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்...  title=

தமிழகத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கரோனா முழு அடைப்பு காரணமாக, மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. எனினும், கரோனாவின் தாக்கம் குறையாததால் தேர்வு நடத்தப்படவில்லை. இதனையடுத்து பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படுமென அறிவித்திருந்தார்.

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவேண்டிய, தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. 

இதேப்போன்று., 24 ஆம் தேதி நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத பல்லாயிர கணக்கான மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது வரை கரோனாவின் தாக்கம் குறையாத நிலையில்., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என பெற்றோர், மாணவர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்ற தனது ட்விட்டர் பக்கத்தில், “10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்குப் பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்றைய தினம், கொரோனா வைரஸ் முழு அடைப்பால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12 தேர்வுகளை ஜூலை முதல் இரண்டு வாரங்களில் நடத்தப்படும் என CBSE அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News