தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம்

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2020, 05:40 AM IST
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் title=

மதுரை: தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு நடைபெறும் அன்று சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்என்ற பிரமாணப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அரசியலமைப்பு விதிகள் மீறவில்லை. மேலும் தமிழுக்கு முக்கியத்தும் அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதை போல குடமுழுக்கு நடத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குடமுழுக்கு நடந்து முடிந்ததும், அது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தனர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News