ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு

Last Updated : Apr 20, 2017, 11:49 AM IST
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு title=

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சந்தித்து அமைச்சர் ஜெயகுமார் பேசி வருகிறார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

அதிமுக அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு அணியினரும் இணைவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரு அணியினரும் ஒன்று சேர்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தம்பிதுரை மற்றும் ஜெயக்குமார் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்கள். சுமார் 30 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

பின்னர் பேசிய அவர்:-

இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. நட்பின் காரணமாகவே ஆளுநரை சந்தித்தேன். நண்பர் என்ற காரணத்திலேயே சந்தித்தேன் வேறு எந்த காரணமும் இல்லை. இந்த சந்திப்பை அரசியலாக்க வேண்டாம். 

இவ்வாறு கூறினார்.

Trending News