நாடு முழுவதும் 5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80 மற்றும் 81வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மையத்தினர் விநோதமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
"எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்குகிறோம்" என்று கியாஸ் சிலிண்டருக்கு அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர்முழுக்க ஒட்டியிருக்கிறார்கள்.
கோவையில் பல்வேறு இடங்களில் கியாஸ் சிலிண்டர் குறித்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் தோற்றம் 2014 ஆம் ஆண்டு ரூபாய் 410 என்றும் ஏற்றம் 2022ஆம் ஆண்டு ரூபாய் 980 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என்று முடித்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் படிக்க | இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR