தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்பு!

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக   தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தகவல். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2022, 07:11 PM IST
  • தஞ்சாவூரில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும்.
  • விமான போக்குவரத்துக்கு சொந்தமாக 38 ஏக்கர் நிலம் அங்குள்ளது.
  • விமானப்படைக்கு கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்பு! title=

தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இன்று தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி ஆகியோரிடம் தஞ்சை பாராளுமன்ற  உறுப்பினர் S.S.பழநிமாணிக்கம்  ஆலோசனை மேற்கொண்டார்.  தஞ்சாவூர் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், திலகர் திடல் பகுதி, பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. 

அப்பொழுது கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா விடம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் நிலப்பரிவர்த்தனை தொடர்பாக பணி முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  .எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ‘தஞ்சாவூரில் இரண்டாம் உலகப்போரின் போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து முன்பு பயணிகள் விமானப் போக்குவரத்து வசதிகள் நடைபெற்றது. காலப்போக்கில் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தஞ்சாவூரில் விமானப்படை உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே விமான போக்குவரத்துக்கு சொந்தமாக 38 ஏக்கர் நிலம் அங்குள்ளது. அதன்பிறகு விமானப்படைக்கு கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டது’ என்றார். 

தற்போது தஞ்சாவூருக்கு உலகளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதாலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிகமானோர் சென்று, வருவதால் தஞ்சாவூரில் விமான போக்குவரத்து வசதி அவசியமாகிறது என்றும்,  விமானப் போக்குவரத்து துறைக்கு உள்ள 38 ஏக்கர் நிலம், விமானப்படைத் தளத்தின் உள்பகுதியில் உள்ளது. எனவே உள்பகுதியில் உள்ள அந்த நிலத்தை விமானப்படைக்கு கொடுத்துவிட்டு, அதற்கு பதிலான புதுக்கோட்டை சாலையோரம் உள்ள இடத்தை விமானப் போக்குவரத்துக்கு வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். 

மேலும் படிக்க: ராஜீவ் காந்தி வழக்கு : விடுதலையானவர்கள் உண்ணாவிரதமா... இன்னும் சிறைப்பறவைகளாக நால்வர்?

இந்த நிலத்தை வருவாய்த்துறையின் சார்பில் பரிவர்த்தனை செய்து தர கோரப்பட்டுள்ளது. புதுடெல்லில் ஓரிரு நாட்களில் விமான போக்குவரத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக  விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் நான் பங்கேற்கவுள்ளேன்.

தஞ்சாவூரில் விமானப்படை தளத்தில் உள்ள நிலப்பரிவர்த்தனை தொடர்பான நடைமுறைகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். இதையடுத்து விரைவில்  தஞ்சாவூரில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும் என்றார். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் அரேபியா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றுவதால் , தஞ்சை பயணிகள் விமான போக்குவரத்து மூலம் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்றார்.

மேலும் படிக்க: தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கு நன்றி: செய்தியாளர் சந்திப்பில் நளினி

மேலும் படிக்க: சிறை வாசம் முடிந்தது... 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News