மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?

Breakfast for students : தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

Written by - Chithira Rekha | Last Updated : Sep 7, 2022, 06:45 PM IST
  • அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு
  • வரும் 15-ம் தேதி மதுரையில் தொடக்கம்
  • முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்? title=

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆயிரத்து 545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க | தமிழக பள்ளி கல்வித் துறைக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு: கல்வி அமைச்சர்

இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். படிப்படியாக இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் 15-ம் தேதியன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது. 

மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. மொத்தம் 14 மாநகராட்சிகளில் 37,740 மாணவ, மாணவியருக்கும், 23 நகராட்சிகளில் 17, 427 மாணவ மாணவியருக்கும், காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. 

மேலும் படிக்க | ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்: புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News