ஆவின் நிறுவனத்துக்கு மூடுவிழாவா?.... அண்ணாமலை விமர்சனம்

ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 16, 2022, 09:45 PM IST
  • ஆவின் பால் விலையேற்றம்
  • ஆவினின் நெய்யின் விலையும் ஏற்றப்பட்டுள்ளது
  • அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்
ஆவின் நிறுவனத்துக்கு மூடுவிழாவா?.... அண்ணாமலை விமர்சனம் title=

பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஆவினில், 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயிலிருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயிலலிருந்து, ரூ.630ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயிலிருந்து ரூ. 315ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி நெய் 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு,.

இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. 

இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது. தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக - சீமான் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News