பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜனவரி 19ஆம் தேதி) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இந்த வருகையின் போது சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி மறு நாள் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகிறார். ராமர் குலதெய்வமாக வழிபட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் மோடி அரிச்சல் முனையை பார்வையிடுகிறார். பிரதமர் மோடியின் 3 நாள் சுற்றுப்பயண விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
பிரதமர் மோடி, நாளை (ஜனவரி 19ஆம் தேதி) பிற்பகல் 4. 55 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்து அடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு பகுதிக்கு மாலை 5 .15 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு மோடி 5.30 மணிக்கு வருகிறார். வழியில் பாரதிய ஜனதா சார்பில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!
மாலை 6 மணிக்கு விழா கேலோ இந்தியா விளையர்டு போட்டிகள் தொடங்குகிறது. அந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக்சிங் தாகூர், இணை மந்திரி நிசித் பிரமானிக், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கின்றனர். விழா முடிந்ததும் இரவு 7.45 மணிக்கு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.
திருச்சி
மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ராஜ் பவனில் இருந்து புறப்பட்டு 9. 20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10.20 மணிக்கு வந்து அடைகிறார். திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு மோடி செல்கிறார். இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பின்பகுதியில் உள்ள யாத்திரி நிவாஸ் அருகே பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது.
ஹெலிபேடில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருக்கிறார். மூலவர் ரங்கநாதர், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் உடையவர் எனப்படும் ராமானுஜர் சன்னதி ஆகியவற்றிலும் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ராமேஸ்வரம் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் மோடி, அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார். அரிச்சல்முனைக்குச் சென்று அங்கு உள்ள ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனித மண், கடல் நீரை சேகரிக்கிறார். பின்னர், கோதண்ட ராமர் சுவாமி கோவிலுக்கு சென்று தரிசிப்பதுடன் பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமர் மோடி, ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். இந்த வருகையையொட்டி, சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகரம் முழுவதும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பொதுமக்கள் வழிபட இன்று தடை விதிக்கப்படுள்ளது. அத்துடன், திருச்சி நகரம் முழுவதும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலும் இந்த பாதுகாப்பு சிறப்பு பாதுகாப்பு படை (SPG) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ