கரூர்: பைனான்சியரை ஏமாற்றிய கல்யாண ராணி - டிக்டாக்கில் போட்ட ஸ்கெட்ச்

கரூரில் பைனான்சியரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவான கல்யாண ராணி பொன் தேவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2023, 09:26 AM IST
கரூர்: பைனான்சியரை ஏமாற்றிய கல்யாண ராணி - டிக்டாக்கில் போட்ட ஸ்கெட்ச் title=

கல்யாண ராணி

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் என்பது ஏற்ப கரூரில் அரங்கேறியிருக்கிறது கல்யாண மோசடி சம்பவம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பது வந்துள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோர் சிவகாசியை சேர்ந்த பொன்தேவியை, விக்னேஸ்வரனுக்கு வரனாக பார்த்து கொடுத்துள்ளனர். பின்னர் பொன் தேவியை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து பேசி திருமணம் முடித்துள்ளனர். 

எஸ்கேப் ஆன பொன்தேவி

திருமணம் முடிந்த 3-வது நாள் சிவகாசியில் சித்தி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி விக்னேஸ்வரனை அழைத்துக் கொண்டு பொன் தேவி சென்றுள்ளார். அங்கு சித்தியின் மகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு 8,500 பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி உள்ளனர். நீண்ட நேரம் ஆனதால் மனைவியை காணவில்லை என்று விக்னேஸ்வரன் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு பொன்தேவி பல நபர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பொன்தேவி மற்றொரு நபரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது. பின்னர் சிவகாசி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பொன்தேவி, விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | அண்ணாமலை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!

2 குழந்தைகளுக்கு தாய்

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை போலீசார் பொன்தேவி மற்றும் புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதை தொழிலாக வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. விக்னேஸ்வரன் திருமணத்தின்போது பொன்தேவிக்கு 8 பவுன் அளவு தாலி செயின், மோதிரம், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பொன்தேவியின் சொந்த ஊர் தேனி மாவட்டம், கம்பம் என்றும், அவரது முதல் கணவர் கார்த்திக் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

ஏமாற்றுவதே தொழில்

அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி பல ஆண்களை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் தனக்கு திருமண ஆகவில்லை என்று கூறி புரோக்கர் மூலமாக மாப்பிள்ளை பார்ப்பதை தொழிலாக வைத்துள்ளார். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் வரை சென்று, கடைசியில் திருமணத்தை நிறுத்திய சம்பங்களையும் செய்திருக்கிறார் பொன்தேவி. திருமண ஏற்பாடுகள் வரை சென்று ஏமாற்றம் அடைந்தவர்கள் பல பேர் வெளியில் தெரியாமல் உள்ளனர்.

முன்னாள் இந்துக்களே இப்போதைய இஸ்லாமியர்கள் - அமைச்சர் பொன்முடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News