கேரளாவில் இருந்து தமிழகம் வர RTPCR சான்றிதழ் கட்டாயம்

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2021, 11:42 AM IST
கேரளாவில் இருந்து தமிழகம் வர RTPCR சான்றிதழ் கட்டாயம் title=

கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்புக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் இயல்பானது. ஆனால் கொரோனாவின் அச்சம் இன்னும் முடிவடைந்துவிட வில்லை. தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பில் 1,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 59ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் 26 பேர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் கொரோனா 3வது (Corona Third Wave) அலை உருவாகி விட்டதோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனால் கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் இன்று காலை அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் மற்றும் காமராஜர் உள் நாட்டு விமான முனையம் ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை குறித்து முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.,

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் (Kerala) இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் (RTPCR Test) சான்றிதழ் கட்டாயம் என்றும் அப்படி இல்லையென்றால் கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்ட வேண்டும் என்றும் விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

இதற்கிடையில் கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதால் அங்கிருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. 

ALSO READ | Covid Restrictions: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News