பள்ளி, தியேட்டர் திறப்பா? கூடுதல் ஊரடங்கு தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2021, 10:59 AM IST
பள்ளி, தியேட்டர் திறப்பா? கூடுதல் ஊரடங்கு தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை title=

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றியதால் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது. 36 அயிரம் என்ற அளவில் இருந்த பாதிப்பு 60 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு என கூறப்பட்ட நிலையில் 2000ஆக குறைந்தது. சில வாரங்களுக்கு முன்னர் சில பகுதிகளில் மட்டும் பாதிப்பு லேசாக அதிகரித்த நிலையில் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பு 1668ஆக உள்ளது.

அதன்படி தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார். ஊரடங்கு (Tamil Nadu Lockdown) கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்பதற்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், பாதிப்பு தீவிரமாகும்போது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்வார். 

ALSO READ | TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இன்று நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது திரையரங்குகளை திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளதால் முதல்வர் ஸ்டாலின் இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் மேலும் திரையரங்கைச் சார்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | ஓணம் திருநாள், சுதந்திர தினத்தன்று கேரளாவில் முழு ஊரடங்கு இல்லை: கேரள அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News