தமிழக அரசு மக்களிடம் உண்மைகளை மறைக்கின்றது: முக ஸ்டாலின்!

ஆட்சியில் எத்தனை பேர் தங்களுடன் இருக்கின்றனர் என்ற தகவல் தமிழக அரசிற்கு தெரியுமா? என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!

Last Updated : Oct 19, 2017, 01:54 PM IST
தமிழக அரசு மக்களிடம் உண்மைகளை மறைக்கின்றது: முக ஸ்டாலின்! title=

சென்னை: ஆட்சியில் எத்தனை பேர் தங்களுடன் இருக்கின்றனர் என்ற தகவல் தமிழக அரசிற்கு தெரியுமா? என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!

இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்ததாவது; 

தங்கள் ஆட்சியில் எத்தனை பேர் தங்களுடன் இருக்கின்றனர் என்ற தகவல்கள் கூட தெரியா நிலையில், டெங்கு பாதிப்பு குறித்த உண்மையான தகவல்கள் அரசிற்கு எப்படி தெரியும்? என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!

மேலும் நாளை நடக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வாக்காளர் சரிபார்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்!

Trending News