சென்னை: COVID-19 தொற்று நாட்டில் மீண்டும் அதிதீவிரத்துடன் பரவத் தொடங்கியுள்ளது. தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனி மனித இடைவெளி விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க தமிழக அரசு ஏப்ரல் 8 ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததே அண்மையில் தொற்றுநோய் அதிகரித்ததற்கான முக்கிய காரணம் என்று மாநில அரசு தனது அதிகாரப்பூர்வ வெளியீட்டில் குற்றம் சாட்டியது.
புதிய கட்டுப்பாடுகள் (Restrictions) ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும். புதிய கட்டுப்பாடுகளின் படி எவையெல்லாம் அனுமதிக்கப்படும், எவற்றுக்கு அனுமதி இல்லை என்பதற்கான பட்டியலை இங்கே காணலாம்:
#TamilNadu Government issues G.O. imposing fresh Restrictions to implement the #COVID19 #Lockdown across the State (1/2) pic.twitter.com/aTV8aJZ5Dx
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) April 8, 2021
(2/2) pic.twitter.com/n96nubLYon
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) April 8, 2021
அனைத்து மத நிகழ்வுகளும், திருவிழா கூட்டங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ALSO READ: தமிழகத்தில் மீண்டும் லாக்டௌனா? மிரட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் பீதி!!
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். ஆனால் 50 சதவீத வாடிக்கையாளர் திறனில் மட்டுமே இவற்றை இயக்க முடியும்.
மல்டிபிளக்சில் உள்ள திரையரங்குகள், பொழுதுபோக்கு கிளப்புகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சமூக, அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் உட்புற அரங்குகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே இருக்க முடியும்.
வெளிப்புற அரங்கங்களில் நிகழ்வுகள் நடத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த நிகழ்வுகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது.
நீச்சல் குளங்களை விளையாட்டு பயிற்சி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
திருமண விழாக்களில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
வணிக நோக்கத்துக்காக மட்டுமே கண்காட்சி அரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.
பொது போக்குவரத்தின் இயக்கம் வழக்கம் போல் இருக்கும் என்றாலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்டிசி பேருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
டாக்சிகளில், மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். ஆட்டோ ரிக்ஷாக்களில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயின் முதல் கட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகத்தில், கடந்த ஒரு மாதத்தில், ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. சுகாதாரத் துறை கடைசியாக வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மார்ச் 28 அன்று 13,070 ஆக இருந்தது. அது ஏப்ரல் 7 அன்று 27,743 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றின் எண்ணிக்கையை விரைவாகக் குறைக்க அரசு இந்த கட்டுப்பாடுகளுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ALSO READ: Corona Symptoms: மாறிய கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR