ஆதார் வைத்து சிம் கார்டு வாங்கலாம் என்பதால் ஒருவர் ஒரே ஆதார் எண்ணை வைத்து 650-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கியதை தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தொலைத்தொடர்புத் துறை (DoT)-யில் உள்ள செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கருவித்தொகுப்பைப் பயன்படுத்தி இந்த முரண்பாட்டைக் கண்டறிந்தனர். இதன் பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அதில், 658 மொபைல் எண்களுக்கு ஒரே ஆதார் அட்டையே புகைப்பட அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
DoT ஆனது ASTR (தொலைத்தொடர்பு சிம் சந்தாதாரர் சரிபார்ப்புக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகாரம் மூலம் இயங்கும் தீர்வு) மென்பொருளைப் கொண்டு இயங்குவது ஆகும். இது சிம் கார்டு மோசடியைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, போலி அல்லது மோசடி அடையாளச் சான்றுகளின் கீழ் வாங்கப்படும் சிம் கார்டு எண்களை இதன் மூலம் எளிமையாக அடையாளம் கண்டு தடுக்கலாம்.
மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அந்தவகையில், டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து அடையாளச் சான்றாகச் சமர்ப்பிக்கப்பட்ட படங்களை எடுத்து, ஏதேனும் சிம் கார்டு தவறான விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதா ASTR ஆனது கண்டறியும். மேலே குறிப்பிடப்பட்ட வழக்கில், விஜயவாடா மாவட்டத்தில் புகைப்படத்தை மட்டும் அடையாளச் சான்றாக கொடுத்து ஒரே ஆதார் அட்டையைப் பயன்படுத்தி 658 சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை ASTR கண்டறிந்துள்ளது. இதனை தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் தான் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரைணயில் இந்த சிம் கார்டுகள் அனைத்தும் போலுகொண்டா நவீன் என்பவர் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய சிம் கார்டுகளை, கடைகளுக்கும் மற்ற கியோஸ்க்களுக்கும் விநியோகித்துள்ளார். அவர் சிம் கார்டு விநியோகிக்கும் தொழில் உள்ளார் என்றாலும், அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 25,135 சிம்கார்டுகளை சைபர் கிரைம் பிரிவு முடக்கியுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரே ஆதார் அடையாளத்துடன் இணைக்கப்பட்ட பல மொபைல் எண்கள் தொடர்பான மோசடிகள் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இதன் மூலம் வேறொருவரை சிக்கலில் சிக்க வைக்கலாம் என்பதால் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியம். தங்கள் ஆதார் கார்டுடன் எத்தனை சிம்கார்டுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன, அவற்றில் எத்தனை செயலில் இருக்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதாருடன் சிம் கார்டு இணைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
- மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAFCOP) போர்ட்டலைப் பார்வையிடவும்.
- இது சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களைக் கண்டறிய அனுமதிக்கும் இணையதளமாகும்.
- இருப்பினும், உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, உங்கள் தொலைபேசியில் பெறப்பட்ட ஒரு முறை-கடவுச்சொல்லை (OTP) தட்டச்சு செய்யவும்.
- submit என்பதை அழுத்தவும். உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களும் போர்ட்டலில் காட்டப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ