சென்னையில் சிக்கிய 55 சிலைகள்... போலீசார் மீட்டது எப்படி?

Tamil Nadu Crime News: மிக தொன்மை வாய்ந்த பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை மீட்டெடுத்ததற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவற்றை மீட்டது குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2023, 10:57 PM IST
  • சென்னையில் 55 சிலைகள் மீட்பு.
  • அந்த வீட்டின் உரிமையாளர் அமெரிக்காவில் உள்ளார் என தகவல்.
சென்னையில் சிக்கிய 55 சிலைகள்... போலீசார் மீட்டது எப்படி? title=

Tamil Nadu Crime News: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 55 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் இன்று மீட்டனர். 

9ஆம், 10ஆம் நூற்றாண்டு சிலைகள் 

வீட்டின் உரிமையாளர் அமெரிக்காவில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் அதிரடி சோதனை செய்து அதிகாரிகள், அந்த சிலைகளை மீட்டுள்ளனர். உயிரிழந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பெறப்பட்ட சிலைகளும் இவற்றுள் அடக்கம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவு 55 புராதான சிலைகள், பழமையானது ஒன்பதாவது பத்தாவது நூற்றாண்டில் உள்ள சிலைகள். இவைகள் அனைத்தும் கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்று ஆய்வு மூலமாக தெரிய வந்தது. 

நிலுவையில் 301 வழக்குகள்

இவைகளை நமது பிரிவினர் சிலைகளை கைப்பற்றி உள்ளார்கள், இதில் ஒரு சில சிலைகள் வட இந்தியாவை சேர்ந்தவைகளாக இருக்கலாம். ஒரு சில சிலைகள் தென்னிந்திய சிலைகளாக கூட இருக்கலாம். இதுவரை 301 வழக்குகள் கண்டுபிடிக்காமல் புலன் விசாரணையில் உள்ளது. இவைகள் அனைத்தும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்கிறோம்.

மேலும் படிக்க | டெல்லி செல்லும் இபிஎஸ்... அமித் ஷாவிடம் கடிதம் கொடுக்கிறார் - என்ன விஷயம்?

இவைகள் அனைத்தும் கலை அம்சத்துடன் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள், அதிகாரிகளை இதனால் பாராட்டுகிறோம். அருள்மிகு வரதராஜன் பெருமாள் கோவிலில் உள்ள சிலையை அமெரிக்காவில்  கடத்தப்பட்டதாக தெரியவந்தது. இவைகளை தொடர்பு கொண்டு இந்த சிலையை ஆஸ்திரேலியாவில்  இருந்து மீட்டு உள்ளோம்.

பலத்த பாதுகாப்பு

வெளிநாடுகளில் உள்ள கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருவதில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நிறைய சிலைகளை கொண்டு வந்தோம். இப்போது ஒன்று இதேபோல் 13 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து இருக்கிறோம். 13 சிலையில் 12 சிலைகளை ஒப்படைத்து விட்டோம்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மிக சிறப்பாக செயல்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலைகளை ஒப்படைத்துள்ளோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிக பழமையான தொன்மையான சிலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம். போலீஸ் பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா பாதுகாப்புடன் இவர்களை பாதுகாத்து வருகிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 249 சிலைகளை இணையதளத்தில் பதிவு செய்து பொதுமக்கள் பார்வைகளுக்கு தகவலுடன் பதிவு செய்து இருக்கிறோம்.

வெளிநாடுகளில் இருந்து மீட்பு 

எங்களுடைய நோக்கம் இந்த சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது அங்கு சென்று அடைய வேண்டும் என்பதுதான். இங்கே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இந்த 55 சிலைகளை கண்டுபிடித்தது பெரிய சாதனை. சிறப்புமிக்க புராதனமான பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளோம்.

ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட குற்றவாளி தீன தயாளனின் அவரிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சிலைகள், இவர்கள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது, சிலைகளின் அம்சங்களை பார்க்கும்போது தெரிகிறது. நிபுணர்களை வைத்து பார்க்கும்போது இது மிக பழமையானது என்று தெரியவந்தது.

இரண்டு ஆடுகளில் 301 சிலைகளை தமிழ்நாட்டில் பிடித்திருக்கிறோம். அதே போன்று வெளிநாடுகளில் எத்தனை சிலைகள் உள்ளது என்று ஆய்வு செய்து வருகிறோம் அதில் 67 சிலைகள் கண்டுபிடித்து உள்ளோம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிலைகளை மீட்டு உள்ளோம். 

எளிதாக திருட முடியாது

சர்வதேச ஒப்பந்தம் அடிப்படையில் இந்த சிலைகள் எங்களின் ஒப்பந்தத்தை அடிப்படையில் இது எங்களது சிலை தான் என்று நிரூபித்து நாங்கள் மீட்டு வருகிறோம். இது போன்ற பழமை வாய்ந்த சிலைகள் என்று தெரிந்தால் பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பாரம்பரிய எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற விஷயங்கள் பொதுமக்கள் கருத்தில்  கொண்டு தகவல் அளிக்க வேண்டும்.

இவைகளுக்கு விலைகள் குறிப்பிட்டு கூற முடியாது. இவைகளுக்கு விலை மதிப்பு இல்லை. சர்வதேச சந்தைகளுக்கு அதற்கு ஏற்றாக்குள் விலைகள் அவர்களே நியமித்துக் கொள்கிறார்கள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆரம்பித்ததில் இருந்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது 20 ஆண்டுகளாக மிக சுலபமாக திருட முடியாது என்று சூழ்நிலை இருப்பதினால் இப்போது சிலை கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த சிலைகள் கூட வழக்குகள் இல்லை. ஆனால் நாங்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் சிலைகளுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இளம்பெண் பலி... முதல்வர் இரங்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News