சென்னை: இங்கிலாந்தில் COVID-19 வைரசின் புதிய மற்றும் மிகவும் மாறுபட்ட வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சங்களுக்கு மத்தியில், தமிழக அரசு திங்களன்று மக்களுக்கு முகக்கவசங்களை கட்டாயமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளது. இது தொற்றுநோய்க்கு எதிரான ஒரு சிறந்த தடுப்பு வழிமுறையாக மாறியுள்ளது என்று அரசு தெரிவித்தது.
இங்கிலாந்தில் இருந்து மாநிலத்திற்கு திரும்பிய 13 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார்.
அவர்களது இரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வைரசின் புதிய மாறுபாடு இருப்பதாக அறியப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சைகள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் கே பழனிசாமி (Edappadi K Palaniswami) தெரிவித்தார்.
“வைரசின் இந்த புதிய மாறுபாடும் முகக்கவசம் அணியாததால்தான் பரவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்” என்று ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொற்றுநோய் நிலை குறித்து நடந்த மாவட்ட மறுஆய்வுக் கூட்டத்தில் அவர் கூறினார். இப்போது வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி, மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை (Face Mask) அணிவதுதான் என்றார் தமிழக முதல்வர்.
தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சிலர் இன்னும் தொற்றுநோயை லேசாக எடுத்துக்கொண்டு, முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்ற கவலையை வெளிப்படுத்திய முதல்வர், முன்னெச்சரிக்கைகள் குறித்த அரசாங்க வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, சில மாவட்டங்களைத் தவிர, கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பல மாவட்டங்களில் மிகக் குறைவாகியுள்ளது” என்றார் அவர்.
ALSO READ: தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம்! லிஸ்ட் வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய கமல்!
"நான் தமிழகம் (Tamil Nadu) முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளேன. மேலும் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினேன்." என்றார் EPS. லாக்டௌன் விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதைக் காண முடிகிறது” என்றார் அவர்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
தொற்று, சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவரது அரசு இதுவரை ரூ .7,544 கோடியை செலவிட்டுள்ளது. குடிநீர் வழங்குவதைத் தவிர, பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. "இரத்த மாதிரிகள் சேகரிப்பதற்கும், முறையான சிகிச்சை அளிப்பதற்கும், நோய் பரவாமல் தடுப்பதற்கும் மொபைல் அலகுகள் ஈடுபட்டுள்ளன" என்று பழனிசாமி மேலும் கூறினார்.
தொற்று விகிதம் தற்போது 5.84 சதவீதமாகவும், இறப்பு விகிதம் (Falatilty Rate) 1.48 சதவீதமாகவும் உள்ளது என்றார் தமிழக முதல்வர்.
ALSO READ: வெளிநாடுகளில் வேலை இழந்த தமிழர்க்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: PMK
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR