திண்டுக்கல்: தமிழகத்தில் (Tamil Nadu) குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி (Free Rice) வழங்கப்படும் என தமிழக முதல்வர் கெ பழனிசாமி (K Palanisamy) அவர்கள் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் Covid-19 தொற்றை கையாள்வது மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்த ஒரு அதிகாரப்பூர்வ சந்திப்பிற்கு தலைமை வகித்த முதல்வர் அவர்கள், கொரோனா தொற்றை கருத்திக் கொண்டு நவம்பர் மாதம் வரை, குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.
கொரோனா வைரசிலிருந்தும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று முதல்வர் கூறினார். சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் ஆகிய முன்னணி வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டிய முதல்வர், இந்தத் தொற்றால் ஏற்பட்டுள்ள அவசர நிலையால் உருவான சவாலை சமாளிக்க பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தனி நபர் ஒழுக்கம் வைரசின் சங்கிலியை துண்டிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தை தொற்றிலிருந்து விடுபட வைக்கும். ஆகையால் அனைவரும் தனி நபர் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வெண்டியது மிக அவசியமாகும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
நாட்டிலேயே மிக அதிக அளவிலான கோவிட்-19 பரிசோதனைகள் தமிழகத்தில் நடந்துள்ளன என்பதையும் முதல்வர் தெரியப்படுத்தினார். தொடர்ந்து மற்ற மாநிலங்களை விட அதிகப் பரிசொதனைகள் தினமும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பரிசோதனை முடிவுகளைத் துலியமாக வழங்கும் போதுமான RT-PCR கருவிகள் நம்மிடம் உள்ளன என்றும் திரு. பழனிசாமி தெரிவித்தார்.
திண்டுக்கலில் மட்டும் இதுவரை 43,578 பேர் சோதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு எடுக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இங்கு தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் முதல்வர் கூறினார்.
ALSO READ: தமிழகத்தில் அதிகரிக்கும் COVID-19 உயிரிழப்பு... ஒரே நாளில் 112 பேர் பலி!!
தமிழக அரசு தற்போது அறிவித்துள் நவம்பர் வரையிலான இலவச அரிசி திட்டம், கொரோனாவால் வருமானம் இழந்து தவிக்கும் பல லட்சம் குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
முன்னதாக ஏப்ரல் மே மாதங்களில் லாக்டௌனின் போது, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய தமிழக அரசு, லாக்டௌன் நீட்டிக்கப்படதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அதை ஜூன் ஜூலை மாதம் வரை நீட்டித்தது நினைவிருக்கலாம்.