கொளத்தூர் தொகுதியில் கடைசி நேரத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றம்!

திமுக தலைவர் முக ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இருந்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 09:06 AM IST
கொளத்தூர் தொகுதியில் கடைசி நேரத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றம்! title=

சென்னை: கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தமிழகத்தில்  234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை (Assembly Election Results 2021) தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் (Postal ballots Counted) எண்ணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை (TN Assembly Election 2021) நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன என்ற விவரத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

ALSO READ | ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? முழு விவரம்!

இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி விரிவான பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் முகவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் தங்கவேலு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புதிய அதிகாரியாக கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News