புது டெல்லி: தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 19 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரு பட்டியல்கள் நேற்று வெளியிடப் பட்டன.
மீதமுள்ள கீழ்க்கண்ட 4 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் (Anbumani Ramadoss) ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:
ALSO READ | TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்
1. 85. மேட்டூர் திரு. எஸ். சதாசிவம், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க
2. 05. பூந்தமல்லி (தனி) திரு. எஸ்.எக்ஸ் இராஜமன்னார், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
3. 79. சங்கராபுரம் மருத்துவர். இராஜா, எம்.பி.பி.எஸ்.,மாவட்ட மருத்துவர் அணி செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்
4. 69. வந்தவாசி (தனி) திரு. எஸ். முரளி சங்கர், எம்.பி.ஏ மாநில மாணவர் சங்க செயலாளர்
ALSO READ: PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR