எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட வேண்டாம்! பாமக வேண்டுகோள்!

எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டாம் என்று திரையரங்கு உரிமையாளருக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 7, 2022, 06:15 PM IST
  • எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
  • சூர்யா படத்தை திரையிட வேண்டாம் என பாமக மறுப்பு.
எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட வேண்டாம்! பாமக வேண்டுகோள்! title=

சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் அதனை கண்டு மகிழ ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். இதுவரை எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து வெளியான டீசர் மற்றும் பாடல்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்களில் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா, இப்படத்தில் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் காணப்படுகிறார். 

மேலும் படிக்க | வேண்டுகோள் விடுத்த ரஹ்மான்! ஏற்றுக்கொண்ட இளையராஜா!

நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் சூர்யா நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது முழு வேகத்தில் விற்பனையாகி வருகிறது.  இந்நிலையில் பாமக சார்பில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.  அதில் "நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதில் வழக்கறிஞர் சத்குரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க, மற்ற கதாபாத்திரங்களும் உண்மை பெயர் இடம் பெற்றிருந்தது, ஆனால் SI அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டிருந்தது.

காவல் உதவி ஆய்வாளர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி, காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டி உள்ளனர். வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாக தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை, அவர் வன்னிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும் வன்னியர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று பாமக மாநில மாணவர் சங்க செயலாளர் விஜயவர்மன் தெரிவித்துள்ளார்.  இது திரையரங்கு உரிமையாளர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

pmk

மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களின் அப்டேட்களை அள்ளி தெறிக்கவிட்ட ஜி.வி பிரகாஷ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News