'ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது’: உள்ளாட்சி தேர்தல் குறித்த மனுவிற்கு உச்சநீதிமன்றம் காட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 01:41 PM IST
'ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது’: உள்ளாட்சி தேர்தல் குறித்த மனுவிற்கு உச்சநீதிமன்றம் காட்டம் title=

"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க முடியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன பிரச்சனை?" என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை (Local Body Elections) செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதலாக ஏழு மாத காலம் அவகாசம் வேண்டும் எனக்கோரி கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு உச்சநீதிமன்றத்தின் (Supreme Court) தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கோரிக்கையை பார்த்த தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் ஒரு நாள் கூட கால அவகாசம் வழங்க முடியாது எனவும்,  உங்களுக்கு  உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை  பின்பற்றுவது எப்போதும் கடினமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ALSO READ: தொடரும் உள்ளாட்சி பதவிக்கான ஏலம்! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, உள்ளாட்சி, தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, “உங்களால் நாடாளுமன்ற,  சட்டமன்றத் தேர்தலையும் நடத்த முடிகிறது, அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நடத்த முடிகிறது, ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு  வேண்டுமெனில் கால அவகாசம் கேட்கிறீர்கள்.  உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன பிச்சனை ?” என கோபமாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், “கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை நாடு முழுவதிலும் உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பகுதி பகுதியாக பிரித்து அதிகமான ஏற்பாடுகளை செய்து அதன் மூலமாகத்தான் சட்டமன்ற தேர்தலை நடத்த முடிந்தது. அதற்கு பிறகு உடனடியாக கொரோனா அதிகரிக்க தொடங்கியதால் மேற்கொண்டு பணிகளை எதையும் மேற்கொள்ள முடியவில்லை அதனால்தான் காலஅவகாசம் கேட்கிறோம்.” என்றார்.

“மேலும் புதிதாக மாவட்டங்களும்  பிரிக்கப்பட்டன, எனவே, ஏழு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றில்லை மூன்று முதல்  நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கினால் போதுமானது ” என கோரினார். 

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது.  நகர்ப்புற தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தார்

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சனிடம், “உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்குவதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா?” என தலைமை நீதிபதி வினவினார். 

அதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு காலவகாசம் வழங்குவதில்  ஆட்சேபனை இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து  தலைமை நீதிபதி, “தமிழ்நாட்டில் (Tamil Nadu) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோருவது ஏன்? எத்தனை நாட்கள் அவகாசம் வேண்டும் ?” என வினவினார்.

தேர்தலுக்காக என்னென்ன பணிகள்  மேலும் செய்யப்பட  வேண்டியுள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய புதிய பிரமாணப் பத்திரத்தை இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

ALSO READ: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி: ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News