நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தரம் மற்றும் அளவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்ரோல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | இனி பெட்ரோல் விலை தினசரி உயரும்...ராகுல் காந்தி விமர்சனம்
சேலம் 5 ரோடு ரவுண்டானாவில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 5 ரோடு பியூல்ஸ் சர்வீஸ் உரிமையாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சேலம் மண்டல துணைப் பொது மேலாளர் அமரேஸ்வராஜ், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மஞ்சுநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் தரம் அளவு ஆகியவற்றை அளவுகோல் மூலம் கண்டறிவது குறித்து கோட்ட மேலாளர் விளக்கம் அளித்தார். அப்போது பெட்ரோல் டீசல் சோதனைக்கு உட்படுத்தும் போது ஏதேனும் குறைகள் இருந்தால் பெட்ரோல் நிலையங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அப்படி தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. எந்த பெட்ரோல் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்றுக் கொள்ளும் பெட்ரோல் அளவு சரியானதா என்பதை எளிதாக தாங்களே பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் அனைத்து ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 பெட்ரோல் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் சுய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பெட்ரோல் பங்கில் உள்ள அளவை சரிபார்த்தனர். ரேண்டம் முறையில் சரிபார்க்கப்பட்ட இந்த சோதனையானது இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனத்தைச் சார்ந்த டீலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலிய முதன்மை மேலாளர் அய்யப்ப தாஸ், தொழிலாளர் நல ஆய்வாளர் குரு பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR