மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் பல சமப்வங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைஞர்கள் சிலர் இதில் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அது தொடர்பான சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு பதிப்புகள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி உயிரை தொலைத்த சம்பவம் சென்னையின் நடந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் வெங்கீஸ்வரர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இளைய மகன் பிரவீன் (22) எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பிகாம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஸ்விகி டெலிவரி செய்யும் தொழில் செய்து வந்தார். செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் மூழ்கிப்போன பிரவீன், தினமும் நண்பர்களுடன் இணைந்து பப்ஜி கேமை விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரவீன் செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடி வருவதை கண்ட அவரது தாய் பிரவீனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரவீன் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் உடைத்து பார்த்தபோது பிரவீன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து வடபழனி காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஆன்லைன் கேமினால் பல இளைஞர்கள் உயிரிழந்ததால் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டு, பின்னர் இந்தியா வெர்ஷனில் பப்ஜி கேம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)
மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ