அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 12:43 PM IST
அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி title=

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 71 மாற்று திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காக பணி நியமன ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

ALSO READ | கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை - தமிழக அரசு உத்தரவு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடுகள் வாரியாகப் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக தெரிவித்த அவர் கணக்கெடுப்பின் பொழுது மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். விமான நிலைய விரிவாக்கத்திற்க்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

senthilbalaji

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஒருவருக்குத் தோல்வி பயம் ஏற்படும்போது தான் கோபம் வரும் எனவும் அந்த நிலையில் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்தார். இனிவரும் காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசு மதுபானக் கடைகளை பொறுத்தவரை மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த மசோதாவிற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக் குறியான சட்டம் என முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்த அவர் இனி நடக்க இருப்பதை பொறுத்திருந்து காண வேண்டும் என தெரிவித்தார்.

ALSO READ | சைபர் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் - மத்திய அரசு தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News