கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் பேனர் வைப்பதை நிறுத்த வேண்டும்: ADMK

கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பு!!

Last Updated : Sep 13, 2019, 02:41 PM IST
கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் பேனர் வைப்பதை நிறுத்த வேண்டும்: ADMK title=

கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பு!!

சென்னை பள்ளிக்கரணையில்  நேற்று பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து அதிகமுகவின் கொடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்அவுட்டுகள், பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விளைவுகள், கட்டுப்பாடுகளை அறியாமல் சிலர் ஆர்வமிகுதியால் செய்கின்ற செயலால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் தொண்டர்கள் ஈடுபடக் கூடாது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில்  நேற்று பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதலமைச்சர் அறிக்கை வெளியிடலாமே? என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.  இதனைத்தொடர்ந்து, அதிமுக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, திமுகவினர் பேனர், கட்அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News