மத்திய பட்ஜெட் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம் என்று தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Feb 2, 2017, 09:57 AM IST
மத்திய பட்ஜெட் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து!! title=

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம் என்று தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:-

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் முக்கியமான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை பல்வேறு நிலைத்தன்மையற்ற அம்சங்கள் சூழ்ந்துள்ளன. முந்தைய பட்ஜெட்களை விட இது நல்ல முன்னேற்றம் கொண்டதாக காணப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலில் உள்ள முக்கிய 3 சீர்திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். பிப்ரவரி 1-ம் தேதியிலேயே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைப்பும் வரவேற்கத்தக்கது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கம்ப்யூட்டர் மயமாக்குவது மற்றும் வங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முன்மொழிவுகள் வரவேற்கத் தக்கவை. 

வறுமை நிலையில் இருந்து ஒரு கோடி குடும்பங்களை மீட்பது தொடர்பான அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

கல்விக்கான திட்டங்களை வரவேற்கும்.

சென்னை:

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் முக்கியமான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை பல்வேறு நிலைத்தன்மையற்ற அம்சங்கள் சூழ்ந்துள்ளன. முந்தைய பட்ஜெட்களைவிட இது நல்ல முன்னேற்றம் கொண்டதாக காணப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலில் உள்ள முக்கிய 3 சீர்திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். பிப்ரவரி 1-ந் தேதியிலேயே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் இணைப்பும் வரவேற்கத்தக்கது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கம்ப்யூட்டர் மயமாக்குவது மற்றும் வங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முன்மொழிவுகள் வரவேற்கத் தக்கவை. வறுமை நிலையில் இருந்து ஒரு கோடி குடும்பங்களை மீட்பது தொடர்பான அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

கல்விக்கான திட்டங்களை வரவேற்கும் அதே வேளையில், தேசிய அளவிலான தேர்வுகள் எதுவும் தமிழகத்தில் புகுத்தப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

உலகத்தில் அதிவேகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடு இந்தியா. இந்த பட்ஜெட்டை மிகுந்த பாடுபட்டு சமன்படுத்த மத்திய நிதி மந்திரி முயற்சித்துள்ளார். ஆனால் மத்திய பட்ஜெட் விஷயத்தில் தமிழக மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

உலகத்தில் அதிவேகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடு இந்தியா. இந்த பட்ஜெட்டை மிகுந்த பாடுபட்டு சமன்படுத்த மத்திய நிதி மந்திரி முயற்சித்துள்ளார். ஆனால் மத்திய பட்ஜெட் விஷயத்தில் தமிழக மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News