கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்நிலவி வருகிறது.
சென்னையில் வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் மாதத்தில் தமிழகத்தில் வழக்கத்திற்கு அதிகமாக 40 சதவிதம் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நடுவட்டம், சின்னகல்லார் பகுதியில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று கூறினார்.