தென் தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகத்தில் பல இடங்களில் பருவமழை வெளுத்து வாங்கிவருகிறது. இதன்மூலம் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்...
தென் தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதனால் கடல் அலை சுமார் 3.5 மீட்டர் முதல் 4.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தென் மேற்கு திசையில் இருந்து காற்றானது சுமார் 25 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளனர்.