சென்னை: தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தததற்கு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் பாராட்டு வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
”தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் வரவேற்று பாராட்டுகிறது”.
”இதேபோல் சமூக மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கு பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சம் விருது என்பது பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்தும் அறிவிப்பு என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்”.
Also Read | கொடநாடு எஸ்டேட் மேல் ட்ரோன் பறந்ததாக புகார் எழுந்துள்ளது!
”தமிழகத்தில் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி பெறவும், பயிற்சி பெறவும் நிதியுதவி அளிப்பது இதுவே முதல் முறை. மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதையும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் மனதார பராட்டுகிறது”.
”பத்திரிகையாளர்கள் வளர்ச்சி, ஊக்கம், பாதுகாப்பு என அனைத்தையும் பூர்த்தி செய்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், துறை அதிகாரிகள் அனைவருக்கும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நன்றியை தெரிவித்து கொள்கிறது”.
”அதே நேரத்தில் சட்டப்பேரவை அனைத்தும் காகிதமில்லா அறிக்கை என்ற நிலை உருவாகி இருப்பதால் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மடிக்கணிணி வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்”.
ALSO READ | நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR