பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிப்பு..!
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SP Balasubrahmanyam) சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும், பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிகிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக அவர் மகன் SP.சரண் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது.
பிரபல பின்னணி பாடகர் SP.பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் SPB-யின் மகன் சரண் அவர்கள் தெரிவித்திருந்தார்.
ALSO READ | SPB இன் த்ரோபேக் வீடியோவைப் பார்த்ததும் கண்ணீரில் இந்த இளம் இசையமைப்பாளர்கள்
இதை தொடர்ந்து, மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில்SPB-யின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதனால் அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகளைக் கொண்டு, மருத்துவ நிபுணர்குழு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், SPB-யின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அவர் சிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று நிலவரம் குறித்து கேட்டறிகிறார். இதனைத்தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, SPB-யின் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதோடு பாடகர் SPB சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.