Watch Video: சேலம் மருத்துவமனையில் ICU-வில் விளையாடும் எலிகள், பீதியில் நோயாளிகள்!!

சேலத்தில் உள்ள அரசாங்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு நோயாளியால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நோயாளிகள் படுக்கைகளில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, எலிகள் ஆக்சிஜன் பைப்புகளில் துள்ளிக்குதித்துக் கொண்டு, ICU முழுவதும் ஓடுவதைக் காண முடிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2020, 07:01 PM IST
  • எலிகள் ஆக்சிஜன் பைப்புகளில் துள்ளிக்குதித்துக் கொண்டு, ICU முழுவதும் ஓடுவதைக் காண முடிகிறது.
  • எலிகள் ஆக்ஸிஜன் பைப்புகளை சேதப்படுத்தினால் என்ன நடக்கும் என நோயாளிகள் கவலை.
  • மழை பெய்த பின்னரே எலிகளின் நடமாட்டம் ஏற்பட்டுள்ளது-மருத்துவமனை.
Watch Video: சேலம் மருத்துவமனையில் ICU-வில் விளையாடும் எலிகள், பீதியில் நோயாளிகள்!! title=

சேலம்: தமிழகத்தில், சேலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் (Government Hospital) தீவிர சிகிச்சை பிரிவுக்குள் (ICU) எலிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து ஓடுவதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

சேலத்தில் (Salem) உள்ள அரசாங்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு நோயாளியால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நோயாளிகள் படுக்கைகளில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, எலிகள் ஆக்சிஜன் பைப்புகளில் துள்ளிக்குதித்துக் கொண்டு, ICU முழுவதும் ஓடுவதைக் காண முடிகிறது.

நோயாளிகளின் சில உறவினர்கள் எலிகள் சுவர்களில் உள்ள துளைகள் மற்றும் மேற்பகுதிகளிலிருந்து நுழைவதாகக் குற்றம் சாட்டினர். மேலும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் சுத்தமான நீர் கிடைக்காதது குறித்தும் அவர்கள் புகார் கூறினர். எலிகள் ஆக்ஸிஜன் பைப்புகளை சேதப்படுத்தினால் என்ன நடக்கும் என்று கவலைப்பட்ட நோயாளிகள், மருத்துவமனையின் நிலையை மேம்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தினர்.

ALSO READ: தொற்றின் தூதன் என தெரியாமல் mask-ஐ எடுத்துச் செல்லும் அப்பாவி பறவையின் Viral Photo!!

வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோவுக்கு பதிலளித்த மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (GMKMCH) டீன் ஆர்.பாலாஜிநாதன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம், மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விசாரித்ததாகவும், அந்த ஐ.சி.யுவில் இரவு நேரங்களில் எலிகள் சுற்றித் திரிவதைக் கண்டறிந்துள்ளதாகவும் கூறினார்.

மழை பெய்த பின்னரே எலிகளின் நடமாட்டம் ஏற்பட்டுள்ளது என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்த எலிகளைப் பிடிக்க நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எலி (Rats) கேக்குகளை வைத்திருப்பதுடன் மருத்துவமனை வளாகத்தில் 40 இடங்களில் எலி பிடிக்கும் பொறிகளையும் வைத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமைக்குள் மருத்துவமனை ஊழியர்கள் குறைந்தது 50 எலிகளைப் பிடித்தனர். 

ALSO READ: கையில் குழந்தை, மனதில் உறுதி: புலம் பெயர்ந்த பெண் தொழிலாளிதான் Corona காலத்து துர்கை அம்மன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News