Ration Card Verification: ரேஷன் அட்டைக்காரர்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த முக்கியமான அறிவிப்பு என்னவென்றால் ரேஷன் அட்டை மூலம் தொடர்ந்து பொருட்கள் வாங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை முடிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது.
ரேஷன் கார்டு KYC அப்டேட் காலக்கெடு என்ன?
உணவு தானியங்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய "ரேஷன் கார்டு eKYC"-ஐ பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம். ஒருவேளை அவ்வாறு செய்யவில்லை என்றால், உங்கள் ரேஷன் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். உங்களுக்கான காலக்கெடுவிற்கு முன் கட்டாயம் இதை செய்துவிடுங்கள்.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை அக்டோபர் 31, 2024 ஆம் தேதிக்குள்ள அனைவரும் கம்ப்ளீட் செய்ய வேண்டும்.
எதற்காக ரேஷன் கார்டு KYC அப்டேட் செய்ய வேண்டும்?
எதற்காக இந்த KYC செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால், ரேஷன் அட்டை வைத்திருக்கும் பலர் பல மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்குவதே இல்லை. ஆனால் அவர்களிடம் ரேஷன் கார்டு இருக்கும். சிலர் இயற்கை எய்தி இருப்பார்கள். இப்படி சில விசியங்களை மனதில் வைத்து, கள்ளசந்தையை தவிர்க்கவும் தான் இந்த கேஒய்சி (KYC) அப்டேட் செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டு KYC என்றால் என்ன?
KYC என்றால் என்ன எனக் கேட்டால், ரேஷன் கடைக்கு சென்று உங்களோட போட்டோ மற்றும் பிஓஎஸ் எனப்படும் மெஷின்ல உங்களோட கை ரேகையை வைத்துக் ஒவ்வொருவரும் பதிவு செய்ய வேண்டும். இதைத்தான் KYC கம்ப்ளீட் எனக் கூறுகிறார்கள்.
எனவே ரேஷன் கடையில் உணவு பொருட்களை வாங்குபவர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் KSC அப்டேட் பண்ணிருங்கள். அதேநேரத்தில் ஒரு சில பேருக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் சலுகைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க - Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?
eKYC அப்டேட் செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
- தடையில்லா ரேஷன் விநியோகத்தை உறுதி செய்துக்கொள்ளலாம்.
- கள்ளச்சந்தை மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க உதவும்.
- விநியோக செயல்முறையை நெறிப்படுத்தலாம்.
ஆன்லைன் மூலம் eKYC எப்படி அப்டேட் செய்வது?
உங்கள் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் ரேஷன் கார்டு eKYC ஐ ஆன்லைனில் செய்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் KYC அப்டேட் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
- ரேஷன் அட்டைதாரரின் ஆதார் அட்டை.
- ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.
- அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்.
- அவர்களின் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள்.
ஆன்லைனில் KYC அப்டேட் செய்யும் வழிமுறைகள்
- உங்கள் ரேஷன் கார்டு eKYC அப்டேட்டை ஆன்லைனில் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளவும்.
- உங்கள் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
- அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை
- நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் சேர்ந்த உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்
- உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- ரேஷன் கார்டு அப்டேட் செய்ய OTP ஐ உள்ளிடவும்.
மேலும் படிக்க - புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ