பெட்ரோல் பங்கில் மோசடி: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கி சோதனை செய்தபோது பெட்ரோலில் 80 சதவிகித அளவுக்கு தண்ணீர் கலந்து இருந்தது தெரிய வந்தது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 25, 2022, 06:49 PM IST
  • பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.
  • 80 சதவிகிதம் நீர் கலக்கப்பட்டதாக புகார்.
  • இதன் காரணமாக வாகனங்கள் பழுதடைந்தன.
பெட்ரோல் பங்கில் மோசடி: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி title=

சென்னை அருகே பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்கப்பட்டு அதன் காரணமாக வாகனங்கள் பழுதடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கவிதா ஏஜென்ஸீஸ் என்ற பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். பிறகு சிறிது தூரம் வாகனத்தை இயக்கியவுடன் அனைத்து வாகனங்களும் பழுதாகி நின்றுள்ளன.

பின்னர் பழுதாகி நின்ற வாகனங்களை அருகில் உள்ள மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டுசென்று பழுதுபார்தபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கி சோதனை செய்தபோது பெட்ரோலில் 80 சதவிகித அளவுக்கு தண்ணீர் கலந்து இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | தலைமை ஆசிரியர் திட்டியதால் சத்துணவு பெண் அமைப்பாளர் தற்கொலை முயற்சி!

இதையறிந்து அதிர்ந்துபோன மற்ற வாடிக்கையாளர்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து,  மற்ற வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவது நிறுத்தப்பட்டது. மேலும் பழுதான வாகனங்கள் சரிசெய்து கொடுப்பதாகவும் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | பவுனுக்கு ரூ.1200 குறைந்த தங்கம் விலை - காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News