சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. தண்டவாளத்தை விட்டு பயணிகள் ஏற்றி வரும் மின்சார ரயில் தடம் புரண்டு நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டு மின்சார ரயில் பேஷன் பிரிஜ் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலை விட்டு பதறி ஓடிச் சென்றனர். விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரயில்வே பைலட் சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தியதால் உயிர் சேதம் ஏதும் இன்றி தவிர்க்கப்பட்டது.
மேலும் படிக்க | அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு!
இதே போன்று சிறிது நாட்களுக்கு முன்பு குன்னூரில் மலை ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் மேட்டுப்பாளையம் செல்லும் மலைரயில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. 3:30 மணி அளவில் மேட்டுப்பாளையம் செல்வதற்காக குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் கிளம்பிச் செல்லும் போது மலை ரயில் கடைசி பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் பெட்டியினை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் இதில் பயணம் செய்தவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு பின்பு அதிகம் ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணத்தை தற்போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று அவர் கூறினார். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். புதன்கிழமை காலை முதல் இந்த பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கும். இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர், 1000 பேர் காயமடைந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ