கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்: கோவை ஆட்சியர் தகவல்!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகாழமல் இருக்க கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 17, 2019, 05:13 PM IST
கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்: கோவை ஆட்சியர் தகவல்! title=

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகாழமல் இருக்க கேரள எல்லையில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்,  தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப் பட்டுள்ளதாகவும் கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணி தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,070 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட், மை, எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் துணை இராணுவ படையினர் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,070 வாக்குச்சாவடி மையங்களில் 470 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை எனவும் கூறிய அவர், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக மெக்ரோ அப்ரசவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 1880 வாக்கு சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன எனவும், வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க டோக்கன் வசதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய 205 கூடுதல் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News