புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஐ.என்.எக்ஸ் மீடியா (INX Media) வழக்கை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் (P. Chidambaram) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை வரை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நேற்று (செவ்வாயன்று) டெல்லி நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு அனுமதி அளித்ததோடு, தேவைப்பட்டால் கைது செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனுடன், இதுபோன்ற சூழ்நிலையில், சிதம்பரத்தை அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) இன்று கைது செய்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை, சிதம்பரத்திடம் விசாரிக்க அமலாக்கத்துறை திஹார் சிறை (Tihar jail) சென்றது. அவர்களுடன் சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் திகார் சிறை வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிட்டத்தட்ட 55 நாட்கள் சிபிஐ மற்றும் நீதித்துறை காவலில் கழித்துள்ளார். பண மோசடி வழக்கில் (Media money laundering case) ஆகஸ்ட் 21 அன்று அவர் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பணமோசடி கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமயில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance) மத்தியில் ஆட்சியில் இருந்த போது ப.சிதம்பரம் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டில் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை கையகப்படுத்த ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (Foreign Investment Promotion Board) ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டிய சிபிஐ (Central Bureau of Investigatio) சிதம்பரத்துக்கு எதிராக 2017 ஆண்டு மே 15 ஆம் தேதி அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.