சசிகலா அறை எண் 48-ல் ஆஜராக வேண்டும்

Last Updated : Feb 15, 2017, 06:11 PM IST
சசிகலா அறை எண் 48-ல் ஆஜராக வேண்டும் title=

பெங்களூரு நீதிமன்றத்தின் அறை எண் 48-ல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தின் அறை எண் 48-ல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி அசோக் நாராயணன் முன்பு சசிகலா உட்பட மூவர் ஆஜராக வேண்டும் என பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News