வாக்காளர் பட்டியலில், ஒரே பக்கத்தில், ஒரே நபரின் பெயர், புகைப்படம், 11 இடங்களில் இடம் பெற்றுள்ளது இதனால் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் மண்டலத்திற்கு உட்பட்ட முனியப்பன் கோயில் வீதி வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் 11 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
11 பதிவுக்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டு புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு பதிவு தபால் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், ஒரே வாக்காளரின் பெயர் 11 இடங்களில் இடம் பெற்றிருப்பது குறித்தும், ஆனால் வரிசை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை மாறி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.