வெளிநாட்டில் உயிரிழந்த மகன்..உடலை மீட்க முடியாமல் ஆட்சியரிடம் மனு கொடுத்த பெற்றோர்

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மகனின் உடலை மீட்க கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.  

Written by - Yuvashree | Last Updated : May 6, 2023, 04:43 PM IST
  • சீதாராமன் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.
  • ஏ.சி கோளாறு காரணமாக அவர் வேலை செய்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  • சீதாரமனுடன் சேர்த்து 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாட்டில் உயிரிழந்த மகன்..உடலை மீட்க முடியாமல் ஆட்சியரிடம் மனு கொடுத்த பெற்றோர் title=

சேலம் மாவடத்தில் பழைய சூரமங்களத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டியில் உள்ள சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜகோபால் மற்றும் அவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு, சீதாராமன் என்ற மகன் இருந்தார். இவர், சில நாட்களுக்கு முன்னர் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். 

ரியாத்தில் தீ விபத்து:

உயிரிழந்த சீதாராமன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், சவுதி அரேபியாவில் ரியாத்தில் பெட்ரோல் என்ஜினியர் பணிக்காக கடந்த திங்கட்கிழமை (மே 1) அன்று சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் வேலை செய்த நிலையில், அவர் வேலை பார்க்கும் இடத்தில் திடீர் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், சீதாராமனுடன் சேர்த்து 6 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 

மேலும் படிக்க | நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

உயிரிழந்த பரிதாபம்:

சீதாராமன், வேலை காரணமாக சவுதி அரேபியவிற்கு சென்றிருந்த நிலையில் அங்கே இரண்டு நாட்கள் வேலை செய்துள்ளார். இதையடுத்து அவர் வேலை செய்த பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வாசகி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்று தற்போது மூன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. சீதாராமன் சவுதி அரேபியாவில் உயிரிழந்த செய்தியை கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். 

ஆட்சியர் அலுவலகத்தில் மனு:

சவுதி அரேபியாவில் சீதாராமன் உயிரிழந்த செய்தியை அடுத்து, அவரது பெற்றோர்களும் உறவினர்களும் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். அதில், சவுதியில் உயிரிழந்த தங்களது மகன் சீதாராமனின் உடலை மீட்டுத்தருமாறு அவர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த சீதாராமனின் அப்பா ராஜகோபால், செய்தியாளர்கிடம் பேசினார். அப்போது தன் மகன், சவுதிக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து மும்பை வழியாக பயணம் மேற்கொண்டதாக கூறினார். தன் உள்பட 6 பேர் சவுதி அரேபியாவில்  இறந்ததாகவும், வேலைக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளேயே மகன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சீதாராமனின் உடல் எப்போது தமிழ்நாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை என்றும் தனது மகனின் உடலை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

தீ விபத்திற்கான காரணம்:

சீதாராமனின் நண்பரும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உயிரிழந்த தனது நண்பர் மும்பையை சேர்ந்த ஏ.ஜி.எஸ் என்ற நிறுவனத்தின் 13 வருடங்களாக வேலை பார்த்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சவுதியில் வேலை கிடைத்தவுடன் சமீபத்தில்தான் சென்றதாகவும் ஏ.சி கோளாறு காரணமாக தீ விபத்து நிகழந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு:

வெளிநாட்டில் பணிக்குச் சென்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சீதாராமனின் உடலை மீட்டு தர வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பெற்றோர் புகார் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க | திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம்! அப்போ குஜராத் மாடல்? - கி.வீரமணி கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News