சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு

சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2024, 04:44 PM IST
  • சேலம் அதிமுக நிர்வாகி படுகொலை
  • திமுக நிர்வாகிக்கு தொடர்பு என தகவல்
  • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு title=

சேலம் அதிமுக நிர்வாகி படுகொலை

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு சஞ்சீவிராயன்பேட்டை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மர்மகும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த நிலையில் கொலை செய்த குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு கூடத்தில் சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு அருகே அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். 

மேலும் படிக்க | அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு

அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சதீஷை கைது செய்ய வேண்டும் என்று கூறி, சண்முகத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உறவினர்கள் கூறுகையில், சேலம் மாநகராட்சி 55-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் கூலிப்படையை வைத்து சண்முகத்தை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். குறிப்பாக திமுகவை சேர்ந்த சதிஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும் இதற்கு எதிராக பேசியதால் தனது கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி குற்றம்சாட்டினார்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

மேலும், சண்முகத்தை வெட்டி படுகொலை செய்த கூலிப்படையை கைது செய்வதோடு கூலிப்படையை ஏவிய சதீஷையும் கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என உறவினர்கள் திட்டவட்டம் கூறியுள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே தன்னை கொலை செய்வதற்காக கூலிப்படைகள் திட்டம் திட்டி வருவதாக தன்னிடம் தனது கணவர் சண்முகம் தெரிவித்ததாக அவரது மனைவி தெரிவித்தார். மேலும் சதீஷை உடனடியாக கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி உறவினர்கள் கூறியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே நடந்த அரசியல் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் செயல்களால் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெரும் - அண்ணாமலை!

மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News