2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் டிசம்பர் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ரயில்வே துறைக்கான நிதியிலும் எந்த திட்டங்களுக்கு எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று கூறாமல் மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.376 கோடி செலவில் 48 கி.மீ. தூர பெங்களூரு - ஓசூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும் என்றும் பெங்களூரு - ஓசூர் இடையே அதிகமான ரயில்கள் இயக்க இரட்டை ரயில்பாதை வழிவகுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.