ஆர்.கே.நகரில் சுமார் ரூ.15 லட்சம் பறிமுதல்!

ஆர்.கே.நகரில் பண விநியோகம் செய்த 8 பேர் கைது. நேற்று மட்டும் காவல் துறையினர் 15 லட்சம்  ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். 

Last Updated : Dec 17, 2017, 10:34 AM IST
ஆர்.கே.நகரில் சுமார் ரூ.15 லட்சம் பறிமுதல்! title=

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகாளை சித்து வருகிறது. இதை தொடர்ந்து தங்களுக்கு கிடைக்கும் தகவல் மற்றும் புகார்களின் அடிப்படையில் சோதனையும் நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகளை தி.மு.க-வினர் பறிமுதல் செய்து பெயர்கள் பட்டியலையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் பணப்பட்டுவாடா செய்ததாக தேர்தல் அதிகாரியே தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க-வினர் புகார் மனு அளித்தனர். அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க சார்பில் வாக்காளர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் தரப்படுவதாக சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் தி.மு.க புகார் மனு அளித்தனர். அதேபோல், பணப்பட்டுவாடா நடப்பதாக விக்ரம் பத்ராவிடம், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் செய்துள்ளார்.

Trending News