அனல்பறக்கும் ஆர்.கே.நகர் தேர்தலில் 43.47% வாகுப்பதிவு!

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 1-மணி வரை நடை பெற்றுள்ள வாக்குப்பதிவில் 43.47% வாகுப்பதிவாகியுள்ளது.

Last Updated : Dec 21, 2017, 02:49 PM IST
அனல்பறக்கும் ஆர்.கே.நகர் தேர்தலில் 43.47% வாகுப்பதிவு!  title=

நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது.  

மொத்தம் 2,28,234 வாக்காளர்களை கொண்ட ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள், மாற்று எந்திரங்கள் என மொத்தம் 1178 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 1-மணி வரை நடை பெற்றுள்ள வாக்குப்பதிவில் 43.47% வாகுப்பதிவாகியுள்ளது. இதில், பெண் - 29052 , ஆண் - 30973, மற்றவர்கள் - 4 பேர். மொத்தம்- 99,213 பேர் வாகளித்துள்ளனர். 

 

Trending News