ஆர்கேநகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி தேர்தல் அறிக்கை!!

Last Updated : Mar 30, 2017, 11:34 AM IST
ஆர்கேநகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி தேர்தல் அறிக்கை!! title=

ஆர்கேநகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. 

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி, ஓபிஸ் அணி, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சியும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை போன்றவை இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

மொத்தம் இந்த தொகுதியில் 62 வேட்பாளர்கள் உள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதுனன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை இன்று திறந்து வைத்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளரின் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். வாக்குறுதிகள் 10 பக்க தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

16 தலைப்புகளில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

 

Trending News